உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோத வாய்ப்புள்ளதாக சுந்தர் பிச்சை கணித்துள்ளார்..
அமெரிக்கா-இந்தியா வர்த்தக கவுன்சில் நடத்திய மாநாட்டில், கூகுள் நிறுவன தலைமைநிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சைக்கு குலோபல் லீடர்ஷிப் விருது வழங்கப்பட்டது.
இந்த விருதினை பெற்றுக்கொண்டு பேசிய சுந்தர் பிச்சையிடம் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டியில் மோதும் என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த சுந்தர் பிச்சை, இறுதிப்போட்டியில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகள் மோத வாய்ப்பிருப்பதாக கூறினார். மேலும், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதாக சுந்தர் பிச்சை கூறினார்.