இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என இசைஞானி இளையராஜா அறிவித்திருக்கிறார்.
இளையராஜாவின் 76ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை வடபழனி பிரசாத் ஸ்டூடியோவிற்கு வந்த, இளையராஜாவுக்கு, திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலர் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பேசிய இசைஞானி இளையராஜா, இன்று மாலை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்திருக்கிறார். அது எது பற்றியது என்பதை, இன்று மாலை, இசையமைப்பாளர்கள் யூனியன் சார்பில், நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில், சொல்வதாகவும் இளையராஜா கூறியிருக்கிறார்.