பெரு நாட்டில் 1,200 ஆண்டுகளுக்கு முந்தைய நாகரீகம் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன

பெரு நாட்டில் சுமார் ஆயிரத்து 200 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர்களின் எலும்புக் கூடுகளும், பண்டைய காலப் பொருட்களும் அகழ்வாய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன.

லம்பாயெக்யூ என்ற பகுதியின் எல் சொர்ரோ என்ற இடத்தில் 2 மாதங்களாக அகழ்வாராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்களுக்கு பல்வேறு சடங்குகளுடன் புதைக்கப்பட்டவர்களின் எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. அவற்றில் சிலவற்றில் பாதங்கள் இல்லாததால் சடங்குகள் காரணமாக வெட்டப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

சூழலியல் மாற்றம் காரணமாக அந்த சமூகம் அழிந்திருக்கலாம் என கணிக்கப்படுகிறது. அத்துடன் செராமிக் பொருட்களும், சில சிலைகள் மற்றும் ஆயுதங்களும் கிடைத்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *