தாயுடன் பொழுதைக் கழித்த ஹம்பக் வகை திமிங்கலம்.

ஆஸ்திரேலியாவில் தாயுடன் சுற்றித் திரிந்த திமிங்கலம் நீச்சல் வீரர்களுடன் விளையாடிய வீடியோ வெளியாகி உள்ளது. ஆஸ்திரேலிய ஆவணப்பட கலைஞர் ஏமான் போர்டர்  என்பவர் ட்ரோன் விமானம் மூலம் கடற்பரப்பை படம் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது சிட்னி கடற்கரையோரம் ஹம்பக் வகையைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று தனது குட்டியுடன் உலாவிக் கொண்டிருந்தது. அப்போது அதனைக் கவனித்த நீச்சல் வீரர்கள் அதனைப் பின்தொடர்ந்து செல்லவே, திமிங்கலத்தின் குட்டி தாயை விட்டுப் பிரிந்து நீச்சல் வீரர்களுடன் சில நிமிடங்கள் விளையாடத் தொடங்கியது. பின்னர் மீண்டும் தாயுடன் சேர்ந்து தனது பயணத்தைத் தொடர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *