தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

இலங்கை மற்றும் அதனை  ஒட்டியுள்ள கடற்பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாலும், வெப்பச்சலனத்தாலும் தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய  மழையும், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொருத்த வரை வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் இருக்கும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகக் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *