ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் இரண்டாம் காலாண்டில் 389கோடி ரூபாய் நட்டம்

எரிபொருள் விலையேற்றம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றால் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 389கோடி நட்டம் அடைந்துள்ளது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கடந்த நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் 105கோடி ரூபாய் இலாபம் ஈட்டியிருந்தது. நடப்பாண்டில் அதன் எரிபொருள் செலவு மட்டும் 56விழுக்காடு அதிகரித்து 845கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

இதனாலும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியாலும் 389கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. எரிபொருள் விலையேற்றம், குறைந்த கட்டணம், தொழில்போட்டி ஆகியவற்றால் இந்த நட்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *