ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் 6வது நாளாக நீடிப்பு, இலங்கையில் உள்ள படகுகளை மீட்கக் கோரி இன்று ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் 6ஆவது நாளை எட்டியிருக்கும் நிலையில், ராமநாதபுரத்தில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருக்கின்றனர்.

இலங்கையால் சிறைபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்து வைக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும், சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மானிய டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 3ஆம் தேதி முதல் நடைபெற்றும் வரும் ராமேஸ்வரம் மீனவர்களின் வேலைநிறுத்தம் இன்று, 6ஆவது நாளை எட்டியிருக்கிறது. ராமநாதபுரத்தில், இன்று உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ராமேஸ்வரம் மீனவர்கள் அனுமதி கோரிய நிலையில், 144 தடை உத்தரவு அமலில் இருப்பதால், ஆட்சியர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி அளித்திருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *