புதுச்சேரியில் கல்வித்துறை இயக்குநர் உள்பட 8 உயரதிகாரிகள் பணியிடமாற்றம்

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவின்பேரில், கல்வித்துறை இயக்குநர், நகராட்சி ஆணையர்கள், மாவட்ட துணை ஆட்சியர் உள்பட 8 உயரதிகாரிகள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கல்வித்துறை இயக்குனராக இருந்த குமார், வணிகவரித்துறை ஆணையராகவும், திட்டத்துறை இயக்குனராக இருந்த ருத்ரகவுடு கல்வித்துறை இயக்குனராகவும், புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியராக இருந்த தில்லைவேல் துணை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட 8 அரசு உயரதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை தலைமை செயலாளர் அஸ்வனி குமார் பிறப்பித்துள்ளார். மேலும், துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் கூடுதல் செயலாளராக சுந்தரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *