தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வி.சி.க தலைவர் திருமாவளவன் சந்திப்பு

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

தி.மு.க கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இல்லை என அண்மையில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறியிருந்தார். இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை திருமாவளவன் சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. – விடுதலைச் சிறுத்தைகள் உறவு வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.

முன்னதாக சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் மாணவர்கள் கருத்தரங்கில் கலந்துகொண்ட திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள் கூட்டணிக் கட்சிகளாக மாறுவதில் எந்த பங்கமும் ஏற்படாது என்றார். தோழமை கட்சிகள் குறித்து தாம் ஏற்கெனவே கூறிய கருத்தைத் தான், துரைமுருகனும் சொன்னதாகத் தெரிவித்த அவர், துரைமுருகன் கருத்து எதார்த்தமானது என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *