தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அளவை குறைவாக விற்பனை செய்த 127 நிறுவனங்களில் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் அளவை குறைவாக விற்பனை செய்த 127  நிறுவனங்களில் விற்பனை தடை செய்யப்பட்டு, சட்டரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், பெட்ரோல், டீசல் அளவை குறைவாக விற்பனை செய்வதாக நுகர்வோர் கருதும் பட்சத்தில், அந்தந்த விற்பனை நிறுவனங்களில் பராமரிக்கப்பட்டு வரும் 5 லிட்டர் கொள்ளளவு உள்ள முத்திரையிடப்பட்ட அளவியை பயன்படுத்தி சரிபார்த்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விற்பனை நிறுவனங்களில் அளவு குறைவாக வினியோகிப்பது, நியாயவிலை கடைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் மண்ணெண்ணெய் அளவு குறைவாக விநியோகிப்பது போன்ற குறைபாடுகள் கண்டறியும் நுகர்வோர், புகார்களை தெரிவிக்க TN-LMCTS என்ற கைபேசி செயலியை கூகுள் பிளேஸ்டோர் மூலம் பதவிறக்கம் செய்து, அதன் வாயிலாக நிவாரணம் பெறலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *