ஜெர்மனி ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு புதிய சீருடைகளை வாங்க முடிவு

ஜெர்மனி ராணுவத்தில் பணிபுரியும் கர்ப்பிணி வீராங்கனைகளுக்காக புதிய சீருடைகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெர்மனி ராணுவத்தில் ஏராளமான பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் சராசரியாக 2 சதவீதம் பேர் கர்ப்பிணிகளாக இருப்பதாகக் கூறியுள்ள ஜெர்மனி ராணுவம், ஏற்கெனவே சோதனை அடிப்படையில் கர்ப்பிணி வீராங்கனைகளுக்கான பிரத்யேக சீருடைகளை வழங்கியது. அந்த சீருடைகள் திருப்திகரமாக இருப்பதாக பயன்படுத்தியவர்கள் தெரிவித்ததை அடுத்து, முதற்கட்டமாக 500 சீருடைகளை வாங்க முடிவு செய்துள்ளதாக ஜெர்மனி ராணுவம் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *