சி.பி.எஸ்.இ. 12 -ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாள் மாற்றம்

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில், 12 ஆம் வகுப்பு ஆங்கிலப் பாடத்துக்கான வினாத்தாளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ.யின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இதுகுறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு ஆங்கில பாட வினாத்தாளில் கடந்த ஆண்டு வரை இடம்பெற்ற 40 கேள்விகள், 35 ஆக குறைக்கப்பட்டுள்ளன.

இதில் 2 வகையான கேள்விகள் இடம்பெறும். முதல் வகையில் சரியான விடையை தேர்வு செய்து எழுதும் தலா ஒரு மதிப்பெண்ணுக்கான 5 கேள்விகள் கேட்கப்படும். மிகக் குறுகிய விடை அளிக்கும் வகையில் 9 கேள்விகள் கேட்கப்படும். இவற்றுக்கு தலா ஒரு மதிப்பெண்கள் வழங்கப்படும். குறுகிய விடையளிக்கும் வகையில் 3 கேள்விகள் கேட்கப்பட்டு, இவற்றின் விடைகளுக்கு தலா 2 மதிபெண்கள் வழங்கப்படும்.

இதன் தொடர்ச்சியாக, 5 மதிப்பெண்கள் கொண்ட விரிவான விடையளிக்கும் 2 கேள்விகள் கேட்கப்பபடும். மாற்றங்கள் செய்யப்பட்ட மாதிரி வினாத்தாள் சிபிஎஸ்இ-யின்  என்ற இணையதளத்தில் வெளியிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *