உ.பி.யில் காவலரைக் கல்லால் எறிந்து கொன்றது தொடர்பாக 11 பேர் கைது

உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூரில் காவலரைக் கல்லால் எறிந்து கொன்றது தொடர்பாக 11பேரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

உத்தரப்பிரதேசத்தின் காசிப்பூரில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற பொதுக்கூட்டத்துக்குப் பாதுகாப்புப் பணிக்குச் சென்றிருந்த சுரேஷ் வத்ஸ், பணிமுடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார். வழியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு கும்பல் அவர் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தியது.

தாக்குதலில் படுகாயமடைந்த சுரேஷ் வத்ஸ் உயிரிழந்தார். நிசாத் என்கிற இனத்தைச் சேர்ந்தவர்கள் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கோரிப் போராட்டம் நடத்தியபோது இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

இது குறித்துப் பெயர் குறிப்பிட்ட 32பேர் மீதும், பெயர் குறிப்பிடாத 60பேர் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக 11பேரைக் கைது செய்துள்ளதாகக் காசிப்பூர் காவல் ஆணையர் பதக் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *