பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது

பெட்ரோல், டீசல் விலை மூன்றாவது நாளாக குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஏறுமுகமாக இருந்ததால், மத்திய அரசும் எண்ணெய் நிறுவனங்களும் பெட்ரோல்-டீசல் விலையைக் குறைத்தன. இருந்தபோதிலும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி ஆகியவற்றின் காரணமாக தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்தது.

இந்நிலையில், கடந்த 3 நாட்களாக பெட்ரோல்-டீசல் விலை குறைந்து காணப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 41 காசுகள் குறைந்து 85 ரூபாய் 22 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை 13 காசுகள் குறைந்து 79 ரூபாய் 69 காசுகளுக்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *