தொடர் விடுமுறை காரணமாக கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகமாக இருந்தது. முக்கிய சுற்றுலாத் தலங்களான நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ் நடைபாதை, குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, ஃ பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இயற்கை அழகைக் கண்டு ரசித்தனர்.

அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகையால் வாகன நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன. கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக குவிந்ததால் சிறு, குறுவியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *