பிக்பாஸ் 2 போட்டியாளர்கள் அறிவிப்பு- ரசிகர்கள் ஷாக்

பிக்பாஸ் 2 இல் இவங்க தானாம்.! சென்ற ஆண்டு நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடேயே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல் தொகுத்து வழங்கினார். தற்போது பிட்க்பாஸ் 2 அடுத்த மாதம் முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதனையும் மீண்டும் கமல் தொகுத்து வழங்க உள்ளார். இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள உள்ளார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, இனியா, ராய் லட்சுமி, ஜனனி ஐயர், சுவர்ணமால்யா, பூனம் பாஜ்வா, பிரியா ஆனந்த், ஆலியா மானசா, ரக்ஷிதா, யாஷிகா ஆனந்த் உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்கலாம் என தெரிகிறது. இவர்களுடன் பரத், ஷாம், சாந்தனு, அசோக் செல்வன், ஜித்தன் ரமேஷ், ஜான் விஜய், படவா கோபி, ப்ரேம்ஜி, யூகி சேது, விஜய் வசந்த், பால சரவணன், ப்ளாக் பாண்டி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட நடிகர்கள் கலந்துக் கொள்ள உள்ளார்கள் அதாவது, தெலுங்கில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் யார் வேண்டுமென்றாலும் கலந்துக்கொள்ளலாம் என அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழில் மட்டும் தான் பிரபலமானவர்களை மட்டும் அழைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *