பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் இயந்திர கண்காட்சி கோலாகலம்

பிரான்ஸ் நாட்டின் டூல்ஹவுஸ் நகர வீதியில் ராட்சத இயந்திர சிலந்தி ஒன்று  நடமாடியது. இதனை பொதுமக்கள் கண்டு வியப்பு அடைந்தனர். இங்கு நடைபெறும் இயந்திர கண்காட்சிக்கு இந்த சிலந்தி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதே போன்று வேறு சில பூச்சிகளும் இயந்திர வடிவில் வீதிகளில் நடமாடின மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

43 அடி உயரமுடைய அரியானா என்ற சிலந்தி 65 அடி தூரம் வரை கால் பரப்பிச் செல்லக்கூடியது. இது 38 டன்கள் எடை கொண்டது. இதே போல் ஆஸ்டேரியன் என்ற மற்றொரு பூச்சி 46 அடி உயரத்தில் காணப்பட்டது. இந்த இயந்திரங்களை இயக்க சுமார் ஒருடஜன் ஆபரேட்டர்கள் உள்ளனர். முடிந்த அளவு உயிருடன் இருப்பது போன்ற மாயையை உருவாக்க அவர்கள் இந்த பூச்சிகளின் உடலின் ஒவ்வொரு அசைவையும் துல்லியமாக கணக்கிட்டனர். குறிப்பாக அவற்றின் கண்கள் மிக துல்லியமாக கணக்கிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *