பனி சூழ் ‘Vikendi’- இன்றிலிருந்து புதிய மேப் உடன் PUBG புதிய அப்டேட் உடன் அசத்தலான வரவேற்பைப் பெற்றுள்ளது PUBG.

“PUBG ஆன்லைன் கேம் நள்ளிரவு முதல் தனது ப்ளேயர்ஸ்களுக்காக 6*6 என்ற அளவில் பனி சூழ் மேப் ‘Vikendi’-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மேப் ட்ரெய்லர் கடந்த வியாழக்கிழமை ‘கேம் அவார்ட்ஸ்’ நிகழ்வில் வெளியிடப்பட்டதிலிருந்து ஆன்லைன் கேம் பிரியர்கள் புதிய மேப் உடன் விளையாட ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இன்று முதல் கேம்-ல் இணைந்துள்ள இந்த Vikendi மேப் வருகிற டிசமப்ர் 19-ம் தேதி முதல் டெஸ்க்டாப் கம்யூட்டர்களிலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய அறிமுகத்தில் கூடுதலாகப் புதிய ஆயுதங்களும் வாகனங்களும் வீரர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. நேற்று வெளியான PS4 உடன் டெஸ்க்டாப் மற்றும் Xbox one ஆகியவற்றிலும் PUBG விளையாட முடியும்.

கூடுதலாக PUBG மொபைல் அப்டேட் ஆண்ட்ராய்டு போன்களில் பீடா வெர்ஷனில் இணைக்கப்பட்டுள்ளது. புது இணைப்பாக சாட் செய்யும் வசதி, மேம்படுத்தப்பட்ட கன்ட்ரோல் செட்டிங்ஸ் மற்றும் எம்கே 47 துப்பாக்கி என PUBG அப்டேட் அசத்தி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *