நேபாள நாட்டின் குர்ஜா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி, மலையேற்றக் குழுவைச் சேர்ந்த 8 பேர் பலி

நேபாள நாட்டின் குர்ஜா மலைச்சிகரத்தில் ஏற்பட்ட பனிப்புயலில் சிக்கி, மலையேற்றக் குழுவைச் சேர்ந்த 8 பேர் உயிரிழந்தனர்.

இமாலயத்தில் உள்ள இந்தச் சிகரத்திற்கு, நேபாள வழிகாட்டிகளுடன் சென்ற தென்கொரிய மலையேற்றக் குழுவினர் 9 பேர், 7 ஆயிரத்து 193 மீட்டர் உயரத்தில் கூடாரம் அமைத்து தங்கி இருந்தனர். அப்போது ஏற்பட்ட கடும் பனிப்புயலைத் தொடர்ந்து அவர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதன்பின்னர் ஹெலிகாப்டர்கள் மூலம் தேடும் பணி நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், பனிப்புயலால் சிதைந்து கிடந்த கூடாரத்திற்கு அருகே 8 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மற்றொருவர் மாயமாகி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆக்சிஜன் சிலிண்டர்கள் உதவியின்றி, 14 மலைச் சிகரங்களின் உச்சியைத் தொட்டு சாதனை புரிந்த  கிம் சாங்-ஹொ என்பவரும் உயிரிழந்தவர்களில் ஒருவர் ஆவார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *