கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று குழந்தைகளை மகிழ்வித்த ஒபாமா

அமெரிக்காவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் குழந்தைகளை, கிறிஸ்துமஸ் தாத்தா போல் சென்று நேரில் சந்தித்து முன்னாள் அதிபர் ஒபாமா இன்ப அதிர்ச்சி அளித்தார்.

5 நாட்களில் கிறிஸ்துமஸ் வரவுள்ள நிலையில் வாசிங்டனில் உள்ள தேசிய குழந்தைகள் மருத்துவமனைக்கு அவர் திடீர் வருகை புரிந்தார். கிறிஸ்துமஸ் தாத்தா குல்லாவுடனும், மூட்டை நிறைய பரிசுப் பொருட்களுடன் வந்த ஒபாமாவைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் மருத்துவமனை என்றும் பாராமல் ஆராவாரித்து மகிழ்ந்தனர்.

மருத்துவமனையில் நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள குழந்தைகளைக் கண்ட ஒபாமா அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்கள், பரிசுப் பொருட்களை வழங்கி மகிழ்வித்தார். ஒபாமாவை அரவணைத்த குழந்தைகள், நடப்பதை நம்ப முடியாத இன்ப அதிர்ச்சியில் நெகிழ்ந்து போயினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *