அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிங்டன், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் – மோனிகா லெவின்ஸ்கி

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிங்டன், கண்டிப்பாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என, அவரது காதலியாக அறியப்பட்ட மோனிகா லெவின்ஸ்கி  கூறியிருக்கிறார்.

1990ஆம் ஆண்டுகளில், பில் கிளிங்டன் அமெரிக்க அதிபராக பதவி வகித்தபோது, தனது உதவியாளராக இருந்த 22 வயது மோனிகா லெவின்ஸ்கியுடன் காதல் வயப்பட்டு நெருக்கமாக பழகினர்.

அப்போது, பில் கிளிங்டனுக்கு எதிரான மற்றொரு பாலியல் புகார் மீதான விசாரணையில், மோனிகாவுடனான உறவு வெளிப்பட்டு, அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை, “The Clinton Affair” என்ற தலைப்பில், ஆவணப்படம் தயாரித்துள்ள அமெரிக்காவின் A&E தொலைக்காட்சி நெட்வொர்க், வருகிற ஞாயிற்றுக்கிழமை முதல் தொடராக வெளியிடுகிறது.

ஆவணப்படத்தில் பங்கேற்று கடந்தகால நிகழ்வுகளை கண்ணீரும் கம்பலையுமாக வெளிப்படுத்தியிருக்கும் மோனிகா லெவின்ஸ்கி, அதிகாரமிக்கவரை காப்பாற்ற தாம் பலிகடா ஆக்கப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். காலங்கள் கடந்தாலும், பில் கிளிங்டண் தம்மிடம் கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மோனிகா லெவினிஸ்கி கூறியிருக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *