அமெரிக்கா மீண்டும் சீனாவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருப்பதாக, அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீனப் பொருட்களுக்கு அமெரிக்காவும் மாறி மாறி இறக்குமதி வரியை அதிகப்படுத்தி வருவதால், இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
இதனால், சர்வதேச அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சீன அதிபருடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். மேலும், சீனா தங்களுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்வதில் ஆர்வமுடன் இருப்பதாக கூறிய டிரம்ப், சீனாவுடன் மீண்டும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பு இருக்கிறது என தாம் நினைப்பதாக கூறினார்.