அமெரிக்காவில் கூடைப்பந்து விளையாட்டின் போது இரு அணி வீரர்களும் மாறி மாறி மோதிக் கொண்டனர்.
ஹூஸ்டன் ராக்கெட்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சலிஸ் லேக்கர்ஸ் என்ற இரு அணிகளுக்கு இடையே வெஸ்ட்கோஸ்ட் என்ற இடத்தில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ராக்கெட்ஸ் அணியினரின் புள்ளியை ஏற்க நடுவர் மறுத்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது இடையில் புகுந்த லேக்கர்ஸ் அணி வீரருக்கும், ராக்கெட் அணி வீரருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் சண்டையிட்ட இருவரும் வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து ஆட்டம் நடந்த போது மீண்டும் கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து ராக்கெட்ஸ் அணியில் மேலும் ஒரு வீரர் வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து நடந்த ஆட்டத்தில் ராக்கெட்ஸ் அணி வெற்றி பெற்றது.