பீகாரின் ஷாஹி லிச்சி பழத்துக்கு புவிசார் குறியீடு

பீகார் மாநிலத்தில் விளையும் ஷாஹி லிச்சி பழத்துக்கு ஜியாக்ரபிகல் இண்டிகேஷன் எனப்படும் புவிசார் குறியீட்டு அந்தஸ்து கிடைத்துள்ளது.

உலக வர்த்தக அமைப்புடனான ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா பல்வேறு துறை சார்ந்த உற்பத்திப் பொருட்கள் புவிசார் குறியீடு என்ற தரக் குறியீடு வழங்குவது தொடர்பான சட்டத்தைக் கொண்டுவந்தது. இதன் படி குறிப்பிட்ட புவியியல் அமைப்பின் சிறப்புத் தன்மை சார்ந்து உற்பத்தியாகும் பொருட்களுக்கு அவற்றின் தரம் சார்ந்து குறியீடு வழங்கப்படுகிறது.

அந்த வகையில் பீகார் மாநிலம் முசாஃபர்பூர் கிழக்கு சம்பரான்  வைஷாலி, சமஷ்டிப்பூர்  பெகுசராய் மாவட்ட புவியியல் சூழல் சார்ந்து விளையும் ஷாஹி லிச்சி அதன் தனிப்பட்ட சுவை, சாறு மற்றும் மணத்துக்கு பெயர் பெற்றது. இந்தப் பழத்துக்கு புவிசார் குறியீட்டு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதன் மூலம் இந்திய மற்றும் சர்வதேச சந்தைகளில் அதன் விற்பனை அதிகரிக்க வாய்ப்பாக அமையும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *