கல்லூரிகள்- பல்கலைக் கழகங்களில் இந்த ஆண்டு முதல் 10 சதவீத இடஒதுக்கீடு அமல்

பொருளாதரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கான பத்து சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த ஏதுவாக, பல்கலைக்கழகங்களில் 25 சதவீத இடங்கள் கூடுதலாக ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் நலித்த பொதுப்பிரிவினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டதை அடுத்து, குஜராத்தில் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்துள்ளது. குஜராத்தை பின்பற்றி ஜார்க்கண்ட் உள்ளிட்ட மேலும் சில மாநிலங்கள் இச்சட்டத்தை அமல்படுத்த உள்ளன. இந்நிலையில் தற்போது எஸ்.சி எஸ்டி பிரிவினருக்கு உள்ள இட ஒதுக்கீட்டுக்கு இடையூறு நேராத வகையில் பத்து சதவீத ஒதுக்கீட்டை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பல்கலைக்கழகங்களில் 2019-20 கல்வியாண்டு முதல் 25 சதவீத இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். சுயநிதியில் இயங்கும் தனியார் பல்கலைக்கழகங்களும் இச்சட்டத்தை அமல்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 40 ஆயிரம் கல்லூரிகளிலும் 900 பல்கலைக்கழகங்களிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட இருப்பதாகவும், இந்த இட ஒதுக்கீட்டால் பொருளாதாரத்தில் பின் தங்கிய பொதுப் பிரிவினருக்கு நன்மை கிடைக்கும் எனவும் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *