உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரி உடல் நலக்குறைவால் காலமானார்

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களின் முன்னாள் முதலமைச்சர் என்.டி. திவாரி உடல் நலக்குறைவால் காலமானார்.

அவருக்கு வயது 93. 1925-ம் ஆண்டு இதே அக்டோபர் 18-ஆம் தேதியில் பிறந்த அவர், தமது பிறந்தநாளன்றே மறைந்துள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த என்.டி. திவாரி உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சராகவும், மத்திய அமைச்சர், ஆந்திர ஆளுநர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்தார். வயது முதுமை மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் டெல்லி சகெட் பகுதியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலமானார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *