அமேதி தொகுதியில் முன்னிலை – காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி

அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார்.

அமேதி,
17-வது நாடாளுமன்றத்தை தேர்ந்தெடுக்க ஏப்ரல் மாதம் 11-ந் தேதி தொடங்கி கடந்த 19-ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளில் வேலூர் நீங்கலாக 542 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்தது. இதில் பதிவான வாக்குகள் அனைத்தும் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில், ஆரம்ப கட்டத்தில் வெளியான முன்னிலை நிலவரங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி சுமார் 40 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி 9 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலை பெற்றுள்ளார். அதேபோல், ரேபரலி தொகுதியில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி முன்னிலை வகிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *