விளையாட்டு வீரர்களை பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் வரிசைப்படுத்தும் ஃபோர்ப்ஸ் பட்டியலில், புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸியை பின்னுக்குத் தள்ளி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

ஊதியம், ஊக்கத் தொகை, முதலீட்டின் மூலம் கிடைக்கும் வருவாய் ஆகியவற்றைத் தவிர்த்து, விளம்பரங்கள் மூலம் ஈட்டும் வருவாயின் அடிப்படையில் விளையாட்டு வீரர்கள் வரிசைப்படுத்தப்படுகிறார்கள். பிராண்ட் மதிப்பின் அடிப்படையில் ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்த பட்டியலில், ரோஜர் ஃபெடரர் முதலிடத்தில் உள்ளார். உசைன் போல்ட், ரொனால்டோ, டைகர்வுட்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ள முதல் 10 இடங்களுக்கான இந்த பட்டியலில் விராத் கோலி 7ஆம் இடம் பிடித்துள்ளார். உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரர் லயனல் மெஸ்ஸி 9ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *