வருகின்ற 26 ஆம் தேதி சுற்றுபயணம் துவங்குகிறார் நடிகர் கமல்; தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் செல்ல முடிவு…

தமிழகம் முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி முதல் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் புதிய அரசியல் கட்சி தொடங்குவது குறித்து பல்வேறு அரசியல் பிரமுகர்கள், மூத்த தலைவர்களுடன் ஆலோசனை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அவர் கேரள முதலமைச்சர் பிரணாயி விஜயன், டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார். மேலும், கொல்கத்தா சென்ற கமல், மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து, தமது அரசியல் பிரவேசம் குறித்து ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே கடந்த மாதம் 7ஆம் தேதி கமல்ஹாசன் தமது பிறந்த நாளையொட்டி, பொதுமக்கள் கருத்தை அறிவதற்காக ‘செல்போன் செயலி’ ஒன்றையும் தொடங்கினார். அப்போது, அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருவதாகவும் கட்சியின் பெயர் குறித்து மக்களை நேரில் சந்தித்த பிறகு முடிவு செய்து அறிவிப்பதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் இதுத்தொடர்பாக மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் செய்வதாகவும் அறிவித்திருந்தார். இந்நிலையில், ஜனவரி 26ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள்ளதாக என நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட நடிகர் கமல்ஹாசன், தமது சுற்றுப்பயணங்கள் குறித்த அனைத்து விவரங்களும் ஜனவரி 18ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *