ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே ஊழியர்களுக்கு கடந்த ஆண்டு 78 நாட்கள் உற்பத்தி சார்ந்த போனசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டு ரயில்வே ஊழியர்களுக்கான போனஸ் தொடர்பாக ரயில்வே நிர்வாகம் செய்த பரிந்துரை மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 78 நாட்கள் சம்பளத்தை உற்பத்தி சார்ந்த போனசாக வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இதன்மூலம், 12 புள்ளி 3 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *