ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும்..! – மு.தமிமுன் அன்சாரி

தூத்துக்குடிக்கு வருகை தந்த ரஜினிகாந்த் அவர்கள், ஸ்டெர்லைட் தொழிற்ச்சாலைக்கு எதிராக போராடியவர்களை சமூக விரோதிகள் என்று குற்றம்சாட்டி இருப்பதை வண்மையாக கண்டிகிறோம்.

தமிழகத்தில் சுற்றுசுழலுக்கு ஆதரவாக, நிலம், நீர், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் விழிப்புணர்வு போராட்டத்தில் தமிழர்கள் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்களை மண்ணுரிமை போராளிகள் என்று சமூகம் கொண்டாடி வருகிறது.

தொழிற்சாலைகளே தேவையில்லை என்று யாரும் கூறவில்லை. ஸ்டெர்லைட் போன்ற சுற்றுச்சுழலை நாசப்படுத்தும் தொழிற்சாலைகளைத்தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.

இதைக்கூட புரிந்துக்கொள்ளாத ரஜினிகாந்த் அரசியல் பேசுவதை நிறுத்திக் கொள்வது நல்லது,

அவர் காவல்துறைக்கு வக்காலத்து வாங்கி பேசுகிறார். நாமும் அவர்களை சகோதர்களாக பாவித்து பரிந்து பேசிகிறோம். ஆனால் IPL எதிர்ப்பு போராட்டத்திலும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திலும் முதலில் தாக்குதலை மக்கள் மீது நடத்தியது யார்? என்பதை ரஜினி விளக்க வேண்டும்.

தளபதி போன்ற படங்களில், போலீஸ்காரர்களை தாக்குவது போன்ற காட்சிகளில் இவர்தானே நடித்திருக்கிறார். இப்போது அரசியலில் ஏன் நடிக்கிறார்?

தமிழர்களின் உணர்ப்பூர்வமாக பல்வேறு போராட்டங்களையும், தமிழர்களின் அரசியல் விழிப்புணர்வையும் கொச்சைப்படுத்திய ரஜினிகாந்த் தமிழக மக்களிடம் நிபந்தனையற்ற முறையில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

தனது மராட்டிய திமிரையும், கன்னட குணத்தையும் இனமான உணர்வுள்ள தமிழர்களிடம் இனி காட்டக்கூடாது என எச்சரித்து வைக்கிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *