மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை கடந்து உயர்வு…

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது.

கர்நாடகத்தின் கபினி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 28 ஆயிரத்து 573 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 14 ஆயிரத்து 583 கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்படுகிறது.

இதேபோல கிருஷ்ணராஜ சாகர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 40 ஆயிரத்து 739 கனஅடியாக உள்ள நிலையில், அணையிலிருந்து விநாடிக்கு 47 ஆயிரத்து 816 கனஅடி வீதம் நீர் திறந்துவிடப்படுகிறது. இரு அணைகளில் இருந்து மொத்தம் 62 ஆயிரத்து 399 கனஅடி நீர் தமிழகத்திற்கு திறந்துவிடப்படுகிறது. ஒகேனக்கலில் நீர்வரத்து விநாடிக்கு 66 ஆயிரம் கனஅடியாக உள்ளது.  இதனிடையே மேட்டூர் அணையின் நீர்மட்டம் 114.63 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு நீர்வரத்து 64ஆயிரத்து 595 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக விநாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் 85.16டிஎம்சி நீர்இருப்பு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *