மணிமண்டபத்தில் சிவாஜி சிலையின் கீழே இருந்த கலைஞர் பெயரை அகற்றியது வரலாற்று பிழை ; விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம்

நடிகர் சிவாஜி சிலை பீடத்தில் இருந்து கருணாநிதி பெயரை அகற்றியது வரலாற்று பிழை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஆவடியில் உண்மை வாசகர் வட்டம் சார்பில், பெரியார் மட்டும் பிறவாமல் இருந்திருந்தால் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. உண்மை வாசகர் வட்ட தலைவர் சா. ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன், டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டெங்கு காய்ச்சலை தடுக்க தமிழகத்தில் அனைத்து கட்சி கூட்டம் மற்றும் வல்லுநர்கள் அமர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

நடிகர் சிவாஜி சிலை பீடத்தில் இருந்து திமுக தலைவர் கருணாநிதி பெயர் அகற்றப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன். கலைஞர் பெயரை அகற்றியது வரலாற்று பிழை என குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தில் தொடர்ந்து கொலை சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், இதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனி கவனம் செலுத்த வேண்டும் என எழுச்சித்தமிழர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *