மக்கள் எதிர்ப்பு காரணமாக, சரக்கு சேவை வரி விதிப்பில் சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு ; தங்க நகைகள் வாங்குவதற்கு பான்கார்டு தேவையில்லை என அருண் ஜெட்லி தகவல்

50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்க இனி பான் அல்லது ஆதார் அவசியமில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் வரிமுறையில் முக்கிய மாற்றமாகக் கருதப்படும் ஜி.எஸ்.டி. வரி விதிப்பில் சில திருத்தங்களை மேற்கொள்ள, உற்பத்தியாளர்கள், வர்த்தகர்கள், ஏற்றுமதியாளர்களிடமிருந்து மத்திய அரசுக்குக் கோரிக்கைகள் வந்தன. இதில் அந்தந்த மாநிலங்கள் சார்பில் நிதியமைச்சர்கள் பங்கேற்று, கோரிக்கைளைத் தெரிவித்தனர். மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் பல மணி நேரம் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் ஆலோசனைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நகை வாங்குவதற்கு பான் கார்டு, ஆதார் எண் அவசியம் என்ற நிபந்தனை தளர்த்தப்பட்டுள்ளது. இனி நகை வாங்க பான் கார்டோ அல்லது ஆதார் எண்ணோ அவசியம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு நிதியாண்டில் 2 கோடி ரூபாய்க்கு மேல் நகை, விலையுயர்ந்த பொருட்கள் விற்கும் வர்த்தகர்கள், பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் வரமாட்டார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கேஸ் ஸ்டவ் உள்ளிட்ட பல்வேறு நுகர்வோர் பொருட்களுக்கும், ஏ.சி. உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி. வரி குறைக்கப்படுகிறது.

இதேபோல், 27 பொருட்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். அதன்படி, உலர்ந்த மாங்கனிக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பிளெய்ன் சப்பாத்திக்களுக்கான வரி 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவுப்பொட்டலங்களுக்கான வரி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

பிராண்ட் அல்லாத நொறுக்குத் தீனிகளுக்கான வரி 5 சதவீதமாகவும், பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கான வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், பேப்பர் வேஸ்ட் வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் வேஸ்ட் 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும், நூல் வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாகவும், மார்பிள், கிரானைட் நீங்கலாக தரைபோடப் பயன்படும் கற்களுக்கான வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்டேஷனரிப் பொருட்களில் பலவற்றுக்கு 28 சதவீதமாக இருந்த வரி விகிதம் இனி 18 சதவீதமாகவும், டீசல் இன்ஜின் பாகங்கள் வரி 18 சதவீதமாகவும், சேவைகள்- ஜாப் ஒர்க் – 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளதாக அருண் ஜெட்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

======

ஜி.எஸ்.டி. – வரி குறைப்பு

உலர்ந்த மாங்கனிக்கான வரி 12%லிருந்து 5% ஆக குறைப்பு

பிளெய்ன் சப்பாத்திக்களுக்கான வரி 5% ஆக குறைப்பு

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கு உணவுப்பொட்டலங்களுக்கான வரி 18%-லிருந்து 5% ஆக குறைப்பு

பிராண்ட் அல்லாத நொறுக்குத் தீனிகளுக்கான வரி 5% ஆக குறைப்பு

பிராண்ட் அல்லாத ஆயுர்வேத மருந்துகளுக்கான வரி 12%லிருந்து 5% ஆக குறைப்பு

பேப்பர் வேஸ்ட் வரி 12%லிருந்து 5% ஆக குறைப்பு

பிளாஸ்டிக் மற்றும் ரப்பர் வேஸ்ட் 18%லிருந்து 5% ஆக குறைப்பு

நூல் வரி 18% லிருந்து 12% ஆக குறைப்பு

மார்பிள், கிரானைட் நீங்கலாக தரைபோடப் பயன்படும் கற்களுக்கான வரி 28%லிருந்து 18% ஆக குறைப்பு

ஸ்டேஷனரிப் பொருட்களில் பலவற்றுக்கு 28% இருந்த வரி விகிதம் இனி 18% ஆக குறைப்பு

டீசல் இன்ஜின் பாகங்கள் வரி 18% ஆக குறைப்பு

சேவைகள்- ஜாப் ஒர்க் – 12%-லிருந்து 5% ஆக குறைப்பு

======

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *