போராட்டக்காரர்களை அச்சுறுத்தவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்!! – S.A.N.வசீகரன்

தமிழக மக்களுக்காக ஜனநாயக வழியில் போராடும் 18 தலைவர்களை கைது செய்து ஒடுக்கிட ஐஜி தலைமையில் கண்காணிப்பு குழு அமைத்திட மத்திய மாநில அரசு இணைந்து திட்டம்!
தமிழக ஆம்ஆத்மிகட்சி கண்டனம்!!!

போராட்டக்காரர்களை அச்சுறுத்தவே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்!!
தலைவர்களை ஒடுக்கும் முதல் முயற்சி தான் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் வேல்முருகன் கைது!!!

ஜல்லிக்கட்டு போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் இந்த இரண்டு மக்கள் போராட்டத்தினாலும் மத்திய மாநில அரசுகள் தான் தோல்வியை சந்தித்தாகவே கருதுகிறது.

தூத்துக்குடியில் போராட்டம் நடத்தியவர்களில் சுட்டு கொள்ளப்பட்டவர் 13 பேர் சுட்டுக்கொலை செய்தது போலிசு,
இனி யாரும் போராட்டம் நடத்தும் எண்ணத்திற்கே வர கூடாது என்பதற்காகவே துப்பாக்கி சுடும் பயிற்சி பெற்ற 25 பேர் கொண்ட குழு (மஞ்சள் பனியன் அணிந்தவர்கள்) பிரயோகமாக வரவழைக்கப்பட்டு 13 பேரை சுட்டு தள்ளினார்கள் இதில் 9 பேர் போராட்டத்தை முன்னின்று வழி நடத்தியவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

இதன் மூலம் மக்கள் போராட்டதின் வேகம் அதிகமாகி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடியே ஆக வேண்டும் என்ற நிலையே தற்பொழுது ஒங்கி நிற்கிறது.
இதனால் இனி மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் வேலையில் அரசு இறங்கியுள்ளது என்பது தெளிவாக தெரிகிறது.

மத்திய பாஜக அரசும், மாநில அரசும் தமிழர்களுக்கு எதிரான விவசாயிகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் எதிரான திட்டங்களான நியூட்ரினோ, ஒஎன்ஜிசி, கெயில், அணுஉலை போன்ற திட்டங்கள், மேலும் காடுகள் மலைகள் விவசாய நிலங்களை அழித்து மற்றும் இயற்கைக்கு எதிரான நிர் நிலை ஆதாரங்களை முற்றிலுமாக பாதிக்ககூடிய சேலம்-சென்னை 8வழி சாலை திட்டம்.

இது போன்ற தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை தடுக்கும் நல்ல நோக்கில் பல இயற்கை ஆர்வலர்கள், சிறிய பெரிய அரசியல் கட்சிகள், அமைப்புகளை சார்ந்தவர்கள் போராடி வருகிறார்கள்.

தமிழக மக்களுக்காக ஜனநாயக வழியில் போராடும் தலைவர்களை ஒடுக்கும் தடுக்கும் வேளைகளில் இப்பொழது மத்திய மாநில அரசுகள் இணைந்து காவல்துறை மூலம் இறங்கியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 18 தலைவர்களை காவல்துறையின் கண்காணிப்பு வலையத்தில் கொண்டு வந்துள்ளதாக தெரிகிறது.
மேலும் ஐஜி தலைமையில் பிரயோக குழு ஒன்று உருவாக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தலைவர்களை தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச்சட்டம் போன்ற உடனடியாக ஜாமினில் வெளிவர முடியாத வகையில் கைது செய்திட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது அதன் முதல் கட்டம் தான் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது.

இது இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து ஜெர்மனியின் ஹிட்லரை போல் பிரதமர் மோடி சர்வாதிகாரியாக செயல்படுகிறார் என்பதற்கு இதுவும் ஒரு மிகப்பெரிய சான்று.

இது இந்திய நாட்டின் நலனுக்கும் இறையாண்மைக்கும் எதிரானது.
ஒரே நாடு, ஒரே மொழி எனக்கொண்ட ரஷ்யாவில் நடந்த நிகழ்வுகளை ஆட்சியாளர்கள் படிக்க வேண்டும்.
ஜனநாயக வழியில் போராடும் தலைவர்களை ஒடுக்கி மக்களை அடக்கி சர்வாதிகார ஆட்சி நடத்த முற்படுவது மிகவும் தவறானது கண்டிக்கதக்கது.

இந்த அராஜக போக்கை மத்திய மாநில அரசுகள் உடனடியாக கைவிட வேண்டும். சாமானிய மக்களிடமிருந்து சம்பளம் பெற்று வாழ்க்கை நடத்தும் காவல் துறை மக்களுக்காக உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக்கொகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *