பிரிட்டனுக்கும், சீனாவுக்கும் இடையே 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

சீனாவில் 3நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே, அந்நாட்டின் அதிபர் சி ஜின்பிங், பிரதமர் லீ கெகியாங் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார். இருநாட்டு வணிக உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் 930கோடி பவுண்ட் மதிப்பிலான பல்வேறு உடன்படிக்கைகளில் இரு நாடுகளும் கையொப்பமிட்டுள்ளன. சீனாவுடன் செய்த உடன்படிக்கையால் பிரிட்டனில் இரண்டாயிரத்து ஐந்நூற்றுக்கு மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என பிரிட்டிஷ் அரசு தெரிவித்துள்ளது. பிரிட்டிஷ் பொருட்களுக்கும் சேவைகளுக்கும் சீனாவில் நல்ல தேவை இருப்பது இந்த உடன்படிக்கையின் மூலம் தெரியவந்துள்ளதாகவும், பிரிட்டனின் பன்னாட்டு வணிகத்துறைச் செயலர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *