பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு 28 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் ; 7 லட்சத்து 51 ஆயிரம் பேர் பயனடைவார்கள் என தகவல்

7-வது ஊதியக்குழுவின் பரிந்துரைபடி பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இந்த முடிவெடுக்கப்பட்டதாக மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். அதன்படி, 43 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் நிதியுதவியுடன் இயங்கும் நிகர்நிலை பல்கலைகக்கழக பேராசிரியர்கள் ஊதிய உயர்வு பெற உள்ளதாக கூறினார். 329 மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் 12 ஆயிரத்து 912 கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்கள், துணை பேராசிரியர்களும் பயனடைய உள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் குறிப்பிட்டுள்ளார். ஊதிய உயர்வானது 22 முதல் 28 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கூறிய அவர், இதன்மூலம் 7 லட்சத்து 51 ஆயிரம் பேராசிரியர்கள் பயனடைவர் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *