நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு..! – மு.தமிமுன் அன்சாரி இரங்கல் அறிக்கை

நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானர் என்ற செய்தி வருத்தமளிக்கிறது.

அவர் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாத்த வீரர். கட்சி அரசியல் பேதங்களால் நாடாளுமன்ற மரபுகள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என கவனமாக செயல்பட்டார்.

இந்திய இடதுசாரி இயக்கத்தின் மாபெரும் தலைவர்களுள் அவர் ஒருவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

தொழிலாளர்கள், எளிய மக்கள் ஆகியோரின் நலனுக்காக பாடுபட்ட ஒரு அறிவுஜீவி தலைவரை நாடு இழந்திருக்கிறது.

அவரை இழந்து வாடும் தோழர்களுக்கும், உறவுகளுக்கும் மஜகவின் சார்பில் எமது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *