தொண்டர்கள் தங்கள் பக்கம் இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

கரூர் திருமாநிலையூரில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில், கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர், மக்கள் நலத் திட்டங்களுக்காக ஆட்சி நடத்துகிறோம் என்றார். அத்தகைய திட்டங்களுக்கு குறுக்கே வருபவர்களுக்கு மக்கள் பாடம் கற்றுத் தருவார்கள் என்று அவர் கூறினார்.

மேலும், அரவக்குறிச்சி தேர்தலில் செந்தில் பாலாஜி வெற்றிக்காக இரவு பகலாக பாடுபட்டதாகவும், அவர் செய்துள்ள துரோகம் எப்போதும் மறையாது எனவும் முதலமைச்சர் கூறினார். காவிரியின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆய்வு செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டார். முன்னதாக 22 ஆயிரத்து 282 பயனாளிகளுக்கு சுமார் 89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர், 5 துறைகள் சார்பில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களையும் திறந்துவைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *