திருவண்ணாமலை அருகே, மாட்டு வண்டியில் மணல் அள்ளச் சென்றவர் மரணமடைந்தற்கு வனத்துறையினரே காரணம் என்று குற்றம்சாட்டிய பொதுமக்கள், வனத்துறை காவலரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள மேல்புழுதியூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த திருமலை சந்தக்கவுண்டன் புதூர் வனப்பகுதியில் மாட்டு வண்டியில் மணல் அள்ளச்சென்றுள்ளார். அப்போது, அங்கு வந்த வனத்துறையைச் சேர்ந்த 5 பேர் திருமலையைத் தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், வனப்பகுதியில் சந்தேகத்திற்கு உரிய வகையில் திருமலை இறந்து கிடந்தார். இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்களும், கிராம மக்களும் அப்பகுதியில் குவிந்தனர். அப்போது, திருமலையைத் தாக்கியதாக கூறப்படும் வனத்துறையைச் சேர்ந்த 5 பேரில், தாண்டவராயன் என்பவர் மட்டும் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரை மறித்த கிராம மக்கள், சரமாரியாக அடித்து உதைத்தனர். வனத்துறைக் காவலர் தாண்டவராயன் வந்த இருசக்கர வாகனத்தையும் பொதுமக்கள் தீவைத்துக் கொளுத்தினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *