வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் வெயின் பிராவோ உலகின் அனைத்து டி20 லீக் தொடரில் விளையாடியுள்ளார். இந்த ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெயின் பிராவோவை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிராவோ தான் விளையாடியதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான் சிறந்த அணி என்று கூறினார். கேப்டன் டோனி, சுரேஷ் ரெய்னா, ஜடேஜா மற்றும் புது வீரர்களை சந்திக்க ஆவலாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
2018-01-31