தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வேதனை தெரிவித்துள்ளார்.

ஜெனீவா மனித உரிமை கவுன்சிலில் நேற்று நடைபெற்ற தமிழ் உலகம் அமைப்பின் கூட்டத்தில் பங்கேற்று அவர் உரையாற்றினார். பாக். நீரிணையில் மீன்பிடி தொழில் செய்யும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தொடர் தாக்குதல் நடத்தி வருவதை சுட்டிக் காட்டிய வைகோ, இதுவரை 578 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். தமிழக மீனவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை என்று வேதனை தெரிவித்த அவர், ஈழத் தமிழர்கள் படுகொலைக்கு காரணமாக ராஜபக்சேவும், சிறிசேனாவும் அனைத்துலக நீதிமன்றத்தின் குற்ற கூண்டில் நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், மனித உரிமை ஆணைய நிர்வாகிகள் இலங்கைக்கு நேரில் சென்று விசாரணை நடத்துவதோடு, சுய நிர்ணய உரிமையின் அடிப்படையில் பொது வாக்கெடுப்பு நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வைகோ கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *