தமிழகத்தில் டெங்கு காய்ச்சலால் நாள்தோறும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கூத்தம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு. இவரது மகள் பள்ளி மாணவி திவ்யதாரணி 2 நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், காய்ச்சல் அதிகமானதால் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை அளித்த போதும் சிகிச்சை பலனின்றி திவ்யதாரணி உயிரிழந்தார்.

Ftb:

திருப்பூர் மாவட்டம் சூலூரை அடுத்த சாமளாபுரம் கள்ளப் பாளையத்தை சோர்ந்த கனகராஜ் என்பவரின் மனைவி கவிதா கடந்த நான்கு நாட்களாக டெங்கு காய்ச்சலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். காய்ச்சல் தீவிரமடைந்ததையடுத்து கோவையில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Whatsapp:

இதேபோல் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி அருந்ததி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Mail:

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த வேலாயுதபுரத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி ஆர்த்தி கடந்த வாரம் காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் குணமாகாத நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் டெங்கு அறிகுறிகள் இருப்பதாகக் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார்.

Whatspp:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையை அடுத்த எக்கூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி சங்கர் என்பவர் காய்ச்சல் காரணமாக கடந்த 3 நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது. காய்ச்சல் தீவிரமடைந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

Whatspp:

இதேபோல் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஊத்தங்கரை தர்மராஜ் தெருவைச் சேர்ந்த பள்ளி மாணவி ஆசிகா தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Whatsapp:

திருவண்ணாமலை மாவட்டம் கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்த கிருபாகரன் என்பவரின் 2 மகள்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் லீனா என்ற குழந்தைக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, புதுச்சேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். இதனையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவர்களின் அலட்சியப்போக்கால் சிறுமி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Ftb:

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். இவரது 3வயது மகன் விஷ்ணு டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் உயிரிழந்தார்.

Whatsapp:

இதேபோல் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த அம்புரோஸ் என்ற முதியவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

Whatsapp:

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர் கிங்ஸ்ஸி பிரவீன் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நாகை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். காய்ச்சல் அதிகமானதால் திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

Whatsapp:

தமிழகத்தில் நாள்தோறும் டெங்கு மற்றும் மர்மகாய்ச்சலால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *