தமிழகத்தில் இன்றும், நாளையும், பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை நேரங்களில் இன்றும், நாளையும், பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியசாகவும் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலம் மற்றும் திருச்சியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 6, 7 மற்றும் 8-ம் தேதிகளில் தென்மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *