ட்விட்டர் ஆய்வு: பின்தொடர்வோர் பட்டியலில் மோடிக்கு மூன்றாவது இடம்

ட்விட்டரில் உலக அளவில் புகழ் பெற்ற தலைவர்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், அமெரிக்க அதிபர் டிரம்ப் 5 கோடியே 20 லட்சத்திற்கும் அதிகமானோரைப் பெற்று முதலிடம் வகிக்கிறார். அவருக்கு அடுத்தபடியாக, இரண்டாவது இடத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் 4 கோடியே 75 லட்சம் பேருடன் உள்ளார். பிரதமர் மோடி மூன்றாம் இடத்தில் 4 கோடியே 30 லட்சம் பின்தொடர்பவர்களால் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இந்த ஆய்வு சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் அதிக நபர்களால் பின்தொடரப்படும் மற்றும் தேடப்படும் தலைவர்கள் பற்றிய ஆய்வாகும். இந்த ஆய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். இது கடந்த 12 மாத இடைவெளிக்கு பிறகு தற்போது நடத்தப்பட்டது. மேலும் முதல் 10 இடங்களில்  இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ உள்ளிட்டோரும் இடம்பிடித்துள்ளனர். ட்விட்டரில் சுறுசுறுப்பாக இயங்கும் சுஷ்மா சுவராஜ் அதிகளவில் தேடப்படும் பெண் தலைவராக உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *