டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகினாலும் அவர்தான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. தற்போது கேப்டன் பதவியில் இருந்து டோனி விலகி விக்கெட் கீப்பராக பணியாற்றி வருகிறார். விராட் கோலி கேப்டனாக இருந்தாலும் டோனி பெரும்பாலும் அவருக்கு ஆலோசனை கூறி வருகிறார். இந்நிலையில், டோனிதான் எப்போதும் கேப்டன் என்று சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கூறியுள்ளார்.மேலும், டோனிக்கு அதிக அனுபவம் உள்ளதால், அவரோடு சில விஷயங்களை பரிமாற்றி கொள்வது எங்களுக்கு அதிர்ஷ்டம் என்றும் சாஹல் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *