டிவிட்டர் நிறுவனத்தில் இருந்து வேலையை விட்டுச் சென்ற நபர் ஒருவர் அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கை செயலிழக்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்நாட்டு நேரப்படி கடந்த 2-ம் தேதி மாலை 7 மணியளவில், அமெரிக்க அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கு சிறிது நேரம் செயலிழந்தது. இது எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டதாக டிவிட்டர் நிறுவனம் முதலில் விளக்கம் அளித்திருந்தது. டிவிட்டர் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. பின், தவறை ஒப்புக் கொண்ட டிவிட்டர் நிறுவனம், தமது நிறுவனத்தில் வேலைபார்த்த ஊழியர் ஒருவர், இறுதிநாள் பணியின்போது அதிபர் டிரம்பின் டிவிட்டர் கணக்கை டீ ஆக்டிவேட் செய்து சென்றுவிட்டதாக விளக்கமளித்துள்ளது. ஒரு நாட்டின் அதிபராக உள்ளவரின் டிவிட்டர் கணக்கையே அதன் ஊழியர் இயக்கி முடக்க முடியுமென்றால், இது ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலாகவே அந்நிறுவனத்துக்கு மாறியுள்ளது. இதுகுறித்து தொடர்ந்து வெள்ளை மாளிகையில் பேசி வருவதாகக் கூறியுள்ள டிவிட்டர் நிறுவனம், பிரபலங்களின் டிவிட்டர் கணக்கை பாதுகாப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *