டிசம்பருக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும் : பிரதமர் மோடி

டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க வேண்டும்’ என்று அதிகாரிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.

மின்சாரம், மறுசுழற்சி எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை வாயு, நிலக்கரி, சுரங்கம் ஆகியவை தொடர்பான கட்டமைப்பு ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. மத்திய அமைச்சர்கள், நிதி ஆயோக் அதிகாரிகள், பிரதமர் அலுவலக அதிகாரிகள் இதில் கலந்து கொண்டனர். அப்போது அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

சவுபாக்கியா திட்டத்தின்படி இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் டிசம்பர் 31க்குள் அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்க அவர் உத்தரவிட்டார். 2011ல் நடந்த சமூக பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கவும் பிரதமர் வலியுறுத்தினார்.

2014ல் மின்இணைப்பு பெறும் வசதியில் உலக அளவில் 99வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 26வது இடத்திற்கு முன்னேறியதற்காக அதிகாரிகளுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார். சூரியஒளி மின்சாரத்தை விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில் கட்டமைப்பை மாற்ற வேண்டும் என மோடி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *