சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு விலையில் மாற்றம் இல்லை; போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் விளக்கம்…

சென்னை மாநகர பேருந்துகளின் ஆயிரம் ரூபாய் மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு தொடர்ந்து அதே விலையில் விற்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை எழிலகத்தில் போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு சியுஜி செல்போன் வழங்கும் திட்டத்தை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பேருந்து கட்டணம் தொடர்பான பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார். மேலும் மாநகரப் பேருந்துகளில் ஆயிரம் ரூபாய்க்கான மாதாந்திர சலுகைக் கட்டண பயணச்சீட்டு அதே விலையில் வழங்கப்படும் என்று அவர் கூறினார். கட்டண உயர்வால் அரசுப்பேருந்துகளை நாடும் பொதுமக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது உண்மைதான் என்றும், இதனை சரி செய்யும் விதத்தில் ஆயிரம் பேருந்துகள் கூடுதலாக சாதாரண கட்டணத்தில் இயக்கப்படுவதாகவும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *