சீனாவில் மிளகாய் சாப்பிடும் போட்டி

நாம் சாப்பிடும் உணவுப் பொருளில் சிறிய துண்டு மிளகாயைக் கடித்து விட்டாலே கண்களில் நீர் பெருக, அடுத்த நொடியே தண்ணீரைத் தேடுகின்றோம்.

ஆனால் சீனாவில் ஒருவர் ஒரே நிமிடத்தில் 50 மிளகாய்களை சாப்பிட்டு சாதனை படைத்துள்ளார். ஹூனான் மாகாணத்தில் நடைபெற்ற வருடாந்திர மிளகாய் உண்ணும் போட்டியில் பங்கேற்றவர்கள் 40 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் உள்ள வெந்நீரில் அமர்ந்து மிளகாயை சாப்பிடவேண்டும் என்பது நியதி.

இந்தப் போட்டியில் தாங் ஷூவைஹூய் ((Tang Shuaihui)) என்பவர் வெற்றி பெற்றார். கடந்த வருடம் நடந்த போட்டியில் வெற்றி பெற்றவர் 47 மிளகாய் மட்டுமே சாப்பிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *